Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
ஆரோக்கியம்

உடல் எடை குறைக்கனும்னா மதியம் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…

உடல் எடை குறைக்கனும்னா மதியம் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க…

உடல் எடையை குறைப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஒழுங்கான டயட் மற்றும் கடுமையான உடற்பயிற்சி தேவை. கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டிய சூழல் உருவானதால், உடல் செயல்பாடுகள் குறைந்துவிட்டன. அதனால், பலரும் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிட்டது.

உடல் எடையைக் குறைப்பதற்காக நீங்கள் டயட் இருக்கிறீர்கள் என்றால், இந்த கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில், உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் மதிய உணவில் சேர்க்க கூடாத உணவுகள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை மதிய வேளையில் சாப்பிட்டால் உடல் எடை வேகமாக அதிகரிப்பதோடு, உடல் எடை குறைக்கும் முயற்சியையும் கெடுத்துவிடும்.

மதிய உணவில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள்

மதிய வேளையில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை சாப்பிடுபவர்களின் உடல் எடை வேகமாக அதிகரிக்கக்கூடும். எனவே, மதிய உணவில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக, முட்டை, பீன்ஸ் மற்றும் மீன் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.

பிரட்-சாண்ட்விச்

நேரமின்மை காரணத்தால் பெரும்பாலானவர்கள் தங்களது மதிய உணவிற்கு பிரட் மற்றும் சாண்ட்விச்களை அதிகம் சாப்பிட ஆரம்பித்து விட்டனர். அவை எவ்வளவு சுவையானதாக இருந்தாலும், அவை ஆரோக்கியத்திற்கு அந்தளவு நல்லதல்ல. பெரும்பாலும், சீஸ் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த வெண்ணெய் சாண்ட்விச்களில் பயன்படுத்தப்படுவதால் இது உடல் கொழுப்பை அதிகரிக்க செய்யும். எனவே, நீங்கள் எடை இழக்க விரும்பினால், அதை சாப்பிடாதீர்கள்.

டின்களில் அடைக்கப்பட்ட காய்கனிகள்

இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் டின்களில் அடைக்கப்பட்ட காய்கள் மற்றும் பழங்களை சாப்பிடுவது பிரபலமாகிவிட்டது. காய்கறிகள், பழங்கள் உடலுக்கு ஆரோக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. அவை, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வழங்குகின்றன. ஆனால் அவற்றை ப்ரஷாக சாப்பிடும் போது தான் முழு சத்துக்களும் கிடைக்கும். பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்களில் சத்துக்கள் குறைவு மற்றும் உடல் எடையைக் குறைப்பதிலும் சிக்கலை உண்டு பண்ணும்.

இந்த சரும பிரச்சனைகள் சிறுநீரக பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம்…உஷார்!!!

நீளமான அடர்த்தியான கூந்தலை பெற இந்த 3 விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்தால் போதும்…

ஆன்மீக பயணத்தில் நடிகர் அஜித் குமார்…

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

ஆரோக்கியத்திற்கு சிறந்தது சைவமா அல்லது அசைவமா? இதோ முழுமையான அலசல்! வாசிக்க →